சென்னை, திருக்கோவில் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருக்கோவில் பணியாளர்களின் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகள் 2020-ல் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம், ஓய்வு பெறும் திருக்கோவில் பணியாளர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாட்கள் வரை ஒப்படைத்து, அதற்குரிய பணப்பலனைப் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், திருக்கோவில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையாக 12 மாத மகப்பேறு விடுப்பினைப் பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. திருக்கோவில் பணியாளர்களின் பணிநலன், குடும்ப நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலன் மற்றும் மகப்பேறு விடுப்பு ஆகிய இரு முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் திருக்கோவில் பணியாளர்கள் பெரும் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/maternity-leave-for-female-temple-workers-increased-to-12-months




