திருவனந்தபுரம், கேரள அரசு பொதுநிர்வாகத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அதில் பாகிஸ்தான் கொடி பதிவிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு அதில் ஒரு செய்தியும் இடம்பெற்றிருந்தது. அதில், “நாங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘டீம் பிளாக்லீட்ஸ்’(Team Blackleets) என்ற குழுவை சேர்ந்த ஹேக்கர்கள். தினமும் பல இணையதளங்கள் ஹேக் செய்யப்படுகின்றன. இன்று உங்கள் முறை” என்று பதிவிடப்பட்டிருந்தது. மேலும் பாகிஸ்தானைப் போற்றும் முழக்கம் ஒன்றும் அதில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அரசு துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது கண்டறியப்பட்டதும், அந்த இணையதளத்தை நிர்வகிக்கும் நிறுவனம் (hosting provider) அந்த கணக்கை தற்காலிகமாக முடக்கியது. இதனிடையே, அரசின் தரவுகள் ஏதேனும் திருடப்பட்டதா? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு இணையதளம் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/pakistani-hackers-took-down-the-kerala-governments-general-administration-department-website



