சென்னை, ஆடி மாதத்தில் தாய் வீட்டுக்கு மனைவி சென்றுவிட்டதால் மற்றொரு பெண்ணுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி காதல் வலை வீசினார். இது அவருக்கு வினையானது. இதை வைத்து அவரை அடித்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சபலத்தால் வந்த வினை சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற இந்த பரபரப்பு சம்பவம் வருமாறு:- சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சுதர்சன் (வயது 32). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற் றது. ஆடி மாதத்தை முன்னிட்டு அவரது மனைவி கடந்த 17-ந்தேதி அன்று அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். சுதர்சன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். அவரது வீட்டின் கீழ் தளத்தில் நமீதா என்ற 22 வயது பெண் வசித்து வருகிறார். மனைவி இல்லாததால் சுதர்சன் மனதில் சபல எண்ணம் எழுந்துள்ளது. நமீதாவிடம் பழகி அவரது செல்போன் எண்ணை வாங்கி அவருக்கு காதல் வலை விரித்துள்ளார். சுதர்சன் செல்போ னில் உருக, உருக பேசியதை அந்த பெண் பதிவு செய்துகொண்டு அவரது தோழி மோனி காவிடம் கூறி இருக்கிறார். அப்போது இந்த உரையாடலை வைத்து சுதர்சனை மிரட்டி பணம் பறிக்க 2 பேரும் திட்டம் போட்டனர். இந்த திட்டத்தில் மோனிகாவின் கணவர் பாலகிருஷ் ணன், அவருடைய நண்பர் கணேஷ், மற்றொரு தோழி சிவரஞ்சனி ஆகியோர் கைகோர்த்துள்ளனர். வீட்டு சிறை நமீதாவும் சுதர்சனை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த 27-ந்தேதி அவரது தோழி மோனிகாவின் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். ஆசையாக சென்ற சுதர்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நமீதா மற்றும் 4 பேரும் சேர்ந்து சுதர்சனை வீட்டு சிறையில் வைத்து. 'செல்போனில் அவர் பேசிய காதல் வசனங்களை காண்பித்து. இதை உனது மனைவியிடம் அனுப்பினால் அவர் பிரிந்து சென்றுவிடுவார். போலீசில் புகார் செய்தால் சிறையில் அடைத்து விடுவார்கள் என்று மிரட்டி ரூ.5 லட்சம் பணம் கேட்டுள்ளனர். சுதர்சன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி இருக்கிறார். இதனால் அவரை அடித்து சித்ரவதை செய்து, பணத்தை தயார் செய்து வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் 29-ந்தேதி வரவழைத்து அடித்து உதைத்துள்ளனர். அப்போது நமீதாவின் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். மனைவி அளித்த நம்பிக்கை இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சுதர்சன் தனது மனைவியிடம் நடந்த விவரத்தை செல்போனில் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது அவரது மனைவி நீங்கள் ஒன்றும் கவ லைப்படாதீர்கள் என்று நம்பிக்கை அளித்தார். மேலும் அவர் தனது கணவர் சுதர்சனை அழைத்துக் கொண்டு சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி அன்று புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். சுதர்சனை அடித்து சித்ரவதை செய்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நமீதா உள்பட 5 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-drug-sales-representative-was-injured-when-his-wife-went-to-his-mothers-house




