சென்னை, ‘அட்டாக்கர்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகர் பவிஷிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்த படத்திற்கான கதைகளை கேட்டு வந்த நடிகர் பவிஷ் தற்போது இயக்குநர் பா. இரஞ்சித்தின் முன்னாள் இணை இயக்குநரான தாமோ நாகபூஷ்ணம், இயக்கத்தில் 'அட்டாக்கர்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். வாலிபாலை மையமாகக் கொண்ட முதல் தமிழ் படம் இந்தப் படத்தை சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கிறார். சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் 'அட்டாக்கர்', வாலிபால் விளையாட்டை பிரதான கதைக்களமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் வாலிபால் விளையாட்டை மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய உணர்வுகள், சமூகப் பின்னணி மற்றும் கலாச்சார அடையாளங்களையும் ஆழமாகப் பதிவு செய்யும் வகையில் உருவாகி வருகிறது. முன்னணி வாலிபால் வீரர்கள் நடிப்பு நடிகை அவந்திகா சுந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகளான அவந்திகா சுந்தர், இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்திற்கு நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், ‘அட்டாக்கர்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகர் பவிஷிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/attacker-film-crew-releases-special-poster-to-mark-bhavishs-birthday




