ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில் தொடங்கக்கூடும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்திருக்கிறார். கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய பெரிய அளவிலான போராட்டம் அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சிஜேபி, `அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்பாகத் தனது செயல்பாடுகள் தொடரும்' என அறிவித்திருந்தது. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அபிஜித் திப்கே, ``டெல்லி நாரைனாவில் புதன்கிழமை (12-ம் தேதி) நடைபெறவிருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் தொண்டர்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அபிஜீத் திப்கே ஆளும் பா.ஜ.க-வின் அழுத்தம் காரணமாக, கூட்டத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட மண்டப உரிமையாளர்கள் கடைசி நேரத்தில் முன்பதிவை ரத்து செய்துவிட்டனர். விழா மண்டபத்தை நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், நாங்கள் அங்கு சென்றபோது, 'எங்களுக்கு மேலிடத்து அழுத்தம் உள்ளது, எனவே உங்களுக்கு மண்டபத்தை தர முடியாது' என்று கூறிவிட்டனர். அருகிலுள்ள மற்ற இடங்களிலும் இதேபோன்று தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. CJP கூட்டங்களுக்கு இடம் தருவதைத் தடுக்கும் வகையில் மக்கள் மிரட்டப்படுகின்றனர். ஜந்தர் மந்தர் சீசன் 2 எப்போது தொடங்கும் என்று இன்ஸ்டாகிராமில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், 'ஜந்தர் மந்தர் சீசன் 2' மிக விரைவில் தொடங்கப் போகிறது." என்றார். "என் சர்டிபிகேட்டைக் காண்பிக்கிறேன்; பேரரசர் தன் டிகிரியைக் காட்டுவாரா?"- யாரைச் சொல்கிறார் அபிஜித்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/jantar-mantar-season-2-might-begin-in-delhi-very-soon


