தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, 88 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையிசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. 1938 ஏப்ரல் 23 அன்று ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா கிராமத்தில் பிறந்த எஸ். ஜானகி, சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் காட்டினார். நாதசுர மேதை பைடிசாமியிடம் இசைப் பயிற்சி பெற்று, பின்னர் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் கோரஸ் பாடகியாக தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். 1956-ல் ஆல் இந்தியா ரேடியோ நடத்திய பாடல் போட்டியில் வெற்றி பெற்று, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கைகளால் விருது பெற்றார். 1957-ல் விதியின் விளையாட்டு திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகி, அதன் பிறகு பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பாடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி, வங்காளம், கொங்கணி, துளு, சிங்களம், சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவராக உயர்ந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்து பாடியதுடன், மௌனப் போராட்டம் என்ற தெலுங்குத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். 1992-ல் இலங்கையில் அவருக்கு "ஞான கான சரஸ்வதி" என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. 1976-ல் பதினாறு வயதினிலே படத்தின் செந்தூரப்பூவே, 1980-ல் மலையாளப் படத்தின் எட்டுமனூரம்பழத்தில், 1984-ல் தெலுங்குப் படத்தின் வெண்ணெல்லோ கோதாரி அந்தம், 1992-ல் தேவர் மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகா ஆகிய பாடல்களுக்காக நான்கு தேசிய விருதுகளை வென்றார். எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, கங்கை அமரன், தேவா, ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களைப் பாடினார். பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிய குரலால் கவர்ந்த எஸ். ஜானகியின் பாடல்கள் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும். அவரது இசைப் பாரம்பரியம் இந்திய திரையிசை வரலாற்றில் அழியாத முத்திரையாகத் தொடரும். தேர்தல் நடக்காத உலக நாடுகள் பற்றி தெரியுமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/passing-of-singer-s-janaki-the-melodious-voice-of-the-indian-music-world-has-fallen-silent




