சென்னை, புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து முறையாக உள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகம் செல்வோர், மாணவ - மாணவியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் விரிசல் இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், அலுவலகம் செல்வோம், பள்ளி,கல்லூரி செல்வோர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-beach-tambaram-local-trains-delayed




