உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த சிறுதானியம், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. குதிரைவாலி அரிசியில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. குளூட்டன் இல்லாத சிறுதானியமான குதிரைவாலி, கோதுமைக்கு சிறந்த மாற்றாகும். செலியாக் நோய் அல்லது க்ளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களும் இதை பாதுகாப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறைவான கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) கொண்ட குதிரைவாலி அரிசி, ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்ல உணவுத் தேர்வாகும். அதிக நார்ச்சத்து இருப்பதால், குதிரைவாலி அரிசி செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட குதிரைவாலி அரிசி, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. குதிரைவாலி அரிசியில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. சிறுதானியங்களில் முக்கிய இடம் பெறும் குதிரைவாலி அரிசியை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தினசரி உணவுகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/why-kuthiraivali-rice-is-best-for-diabetics




