மதுரை, சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வண்டிநகரம் பகுதி நான்குவழிச்சாலையில் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அரசு பஸ் மீது மோதிவிட்டு இடது பக்கம் திரும்பி சாலையோரம் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஆம்னி பஸ் மோதி சுக்குநூறானது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அரசுப் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு பஸ்களிலும் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 4 ஆண்கள், 1 பெண் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உட்பட 42 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-collides-with-government-bus-in-horrific-accident-near-madurai-5-killed




