புதுடெல்லி, செங்கோட்டைக்கு கிளம்பிய பிரதமர் மோடி. வழிமறித்த நண்பர்கள். நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை டெல்லி செங்கோட்டைக்கு புறப்பட தயாரானார். வழக்கமான நேரத்தை விட மிக சீக்கிரமாகவே அவர் தனது இல்லத்தில் இருந்து கிளம்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சுவாரசியமான நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சுதந்திர தின விழா லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உள்ள புல்வெளியில், பிரதமர் மோடி தினமும் காலையில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று சுதந்திர தின விழா என்பதால், அவர் வழக்கத்தை விட சீக்கிரமாகவே செங்கோட்டைக்கு புறப்பட தயாரானார். வழிமறித்த நண்பர்கள் அவர் சீக்கிரமாக புறப்படுவதை எப்படியோ உணர்ந்து கொண்ட அங்கிருந்த விலங்குகளும் மயில்களும், அவர் வாசலுக்கு வரும் முன்பே ஓடிவந்து அவரை சூழ்ந்து கொண்டு வழிமறித்தன. இதுதொடர்பான வீடியோ ஒன்றை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரதமர் நெகிழ்ச்சி பதிவு இதனை தொடர்ந்து, அவற்றுக்கு தானியங்களையும் தீவனங்களையும் பாசத்துடன் வழங்கிவிட்டு பிரதமர் மோடி செங்கோட்டைக்கு கிளம்பினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:"ஒவ்வொரு நாளும் காலையில் என் நண்பர்களுக்கு உணவளிப்பது என் தினசரி வழக்கமான ஒன்று. ஸ்பெஷலான தருணம் நேற்று காலையில் நான் சீக்கிரமாக புறப்படுவதை அவை எப்படியோ தெரிந்துகொண்டன. இதனால் நான் செங்கோட்டைக்கு கிளம்பும்போது என்னை சந்திக்க அவை ஓடி வந்தன. எப்போதும் போல இதுவும் ஒரு தனித்துவமான, ஸ்பெஷலான தருணம்"என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில், பிரதமர் மோடி புன்னகையுடன் மயில்களுக்கு தானியங்களை வழங்குவதும், அங்குள்ள நாட்டுப்பசுக்கள் மற்றும் குறுவகை மாடுகளுக்கு அன்போடு தீவனம் வழங்கி தடவி கொடுப்பதும் இடம்பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/pm-modi-heads-to-red-fort-friends-block-his-way




