மும்பை, நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் காலை வெளியிட்ட சமூகவலைத்தள பதிவில் மருத்துவமனை, அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டு இருந்தார். எனவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பலரும் தவறாக புரிந்து கொண்டனர். இந்த நிலையில், அது தனது உடல்நிலை பற்றியது அல்ல என்றும், மக்கள் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என நடிகர் அமிதாப் பச்சன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது தொடர்பாக, அவர் அந்தப்பதிவை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். பதிவு குறித்த விளக்கம் இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவில் கூறியிருப்பதாவது:- நான் நலமாக இருக்கிறேன். எனது முந்தைய பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் ஒரு உதாரணத்திற்காகவே அதை எழுதினேன். ஒரு சாம்பியன் வீரர் கடுமையான தோல்விக்கு விளிம்பில் இருக்கும்போது ஏற்படும் மனரீதியான மற்றும் உடல்ரீதியான பாதிப்பை குறிக்கவே, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்சி காலத்தை நான் ஒரு உவமையாக பயன்படுத்தினேன். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சியின் தோல்வியை குறிப்பிட்டுத்தான் நான் எழுதினேன். தவறாக கருதி விட்டனர் ஒரு அறுவை சிகிச்சை அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய பிறகு, நமது உடல்நிலையை கையாள்வதுதான் மிகக்கடினமான காலம். அதேபோல, ஒரு சாம்பியன் தோற்கும்போது, அந்த தோல்வியின் பாதிப்பில் இருந்து தன்னை மீட்டெடுப்பதுதான் மிகக் கடினமான காலம். மெஸ்சியை ஒப்பிட்டு நான் குறிப்பிட்டு இருந்ததை. அது என்னைப்பற்றியது என மக்கள் தவறாக கருதிவிட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/that-post-was-all-about-messi-amitabh-bachchan-reveals-the-truth




