திருப்பூர், ஊத்துக்குளி முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன் தமிழ்செல்வம். அவருடைய மனைவி வினோதினி (வயது 25). இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், வினோதினி 2-வதாக கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வினோதினிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த ஆம்புலன்சு ஊழியர்கள், வினோதினியை வாகனத்தில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, வினோதினிக்கு பிரசவ வலி அதிகமானது. மருத்துவமனைக்கு செல்ல சிறிது நேரம் ஆகும் என்பதால் சூழ்நிலையை உணர்ந்த ஆம்புலன்சு ஊழியர்கள், வினோதினிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது வினோதினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான பிரசவ கால சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு தாய் மற்றும் குழந்தை இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை மருத்துவர்கள் பாராட்டினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/pregnant-woman-delivers-baby-girl-in-moving-ambulance




