சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”சகோதர, சகோதரிகளுக்கிடையே நிலவும் அன்பு, பாசம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் திருநாளை கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறவுகளின் புனிதத்தையும், சகோதரத்துவத்தின் மகத்துவத்தையும் போற்றும் இந்நன்னாளில், பெண்களின் கண்ணியத்தையும், உரிமைகளையும் பாதுகாத்து, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சமூகத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/raksha-bandhan-ttv-dhinakarans-greetings



