சென்னை, தூத்துக்குடியில் ரூ.90 கோடியில் பஸ் நிலையம் சீரமைக்கும் பணி. தஞ்சையில் ரூ.130 கோடியில் பல்நோக்கு வணிக வளாகம் அமைக்கும் பணி ஆகியவை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. தனியார் பங்களிப்பு தஞ்சை மாநகராட்சியில் ரூ.130 கோடி மதிப்பில் பல்நோக்கு வணிக வளாகமும், தூத்துக்குடி மாநகராட்சியில் போல்பேட்டை பகுதியில் உள்ள பழைய பஸ் நிலையத்தை ரூ.90 கோடி மதிப்பில் மறுமேம்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த 2 திட்டங்களையும் பொது-தனியார் கூட்டுமுறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஆலோசகரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசின் திட்ட மேம்பாட்டு மானிய நிதியம் டெண்டர் கோரியுள்ளது. இந்த திட்டங்களின் கீழ், தஞ்சை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு, நிதி நிலை உள்ளிட்ட அம்சங்களை ஆலோசகர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான பரிவர்த்தனை ஆலோசனை பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். ரூ.50 லட்சம் கட்டணம் இந்த இரு திட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் பரிவர்த்தனை ஆலோசனை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கான ஒப்பந்த மதிப்பு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வைப்புத்தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் ஆலோசகர், திட்டங்களை பொது-தனியார் கூட்டுமுறையில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளிலும் உதவ வேண்டும். இந்த டெண்டர் சமர்ப்பிக்க அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி காலை 11 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணிக்கு டெண்டர் திறக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-projects-worth-rs-220-crore-in-thanjavur-and-thoothukudi-decision-to-implement-with-private-participation




