சென்னை, மொரப்பூர் - தர்மபுரி ரெயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, மொரப்பூர் - ராணி மூக்கனுார் இடையே, 10 கி.மீ., துாரத்துக்கு ரூ.115 கோடியில் புதிய பாதை அமைக்க 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- மொரப்பூர் தர்மபுரி இடையே 36 கி.மீ. துாரத்துக்கு, 358.95 கோடி ரூபாயில் புதிய பாதை அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இருப்பினும், பல ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டது. மொத்த தேவையான 93 ஏக்கர் நிலத்தில் தற்போது, 50 ஏக்கர் வரை கையகப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கிடையே, நிலம் பகுதி கையகப்படுத்தியகளில், ரெயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக, மொரப்பூரில் இருந்து ராணிமூக்கனுார் இடையே, 10 கி.மீ., தூரம் ரெயில் பாதை அமைக்க, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. ரூ.115.30 கோடியில், மண் பரிசோதனை, பாலங்கள் கட்டுவது, ரெயில் பாதை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். ஒப்பந்ததாரர் தேர்வு செய்து அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த பணிகள் முடிக்கப்படும். மீதமுள்ள 26 கி.மீ., தூரத்திலும் அடுத்தகட்டமாக பணிகள் மேற்கொள்ள, தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-railway-line-from-morappur-to-rani-mukkanur-at-a-cost-of-115-crore-tender-issued




