மும்பை, சுக்பீர் சிங் பாதல் மீது தெய்வீகக் கட்டளையால் தாக்கினேன் என கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுக்பீர் சிங் பாதல் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த புதன்கிழமை மராட்டியம் வந்து இருந்தார். அவர் நேற்று காலை நாந்தெட்டில் உள்ள தக்த் ஸ்ரீ ஹசூர் சாகேப் குருத்வாராவில் மனைவியும், எம்.பி.யுமான ஹர் சிம்ரத் கவுர் பாதலுடன் பிரார்த்தனை செய்தார். பின்னர் மதியம் 1.45 மணியளவில் அவர் நாந்தெட்டில் உள்ள மாதா சாகேப் தேவன் ஜி முகத் குருத்வாராவுக்கு சென்றார். அங்கு அவர் பிரார்த்தனை செய்துவிட்டு படிக்கட்டில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசாமி ஒருவர் திடீரென சீக்கியர்கள் பயன்படுத்தும் 'கிர்பான்' கத்தியுடன் சுக்பீர் சிங் பாதலை நோக்கி பாய்ந்தார். இதை சற்றும் எதிர்பாராத சுக்பீர் சிங் பாதல், அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த நபர் சுக்பீர் சிங் பாதலை கத்தியால் குத்தினார். அவரது வலது கையில் கத்திக்குத்து விழுந்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி சந்தோஷ் கேந்த்ரே அந்த நபரை மடக்கிப்பிடித்தார். அப்போது அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து சுக்பீர் சிங் பாதல் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச் சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அங்கு அவருக்கு ஏற்பட்ட காயத்துக்கு 3 தையல்கள் போடப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சம்பவத்தின் போது அவரது மனைவியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. குருத்வாராவில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரப ரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தியவர் குருத்வாராக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 'அகாலி' என்பது தெரியவந்து இருப்பதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் நாந்தெட் போலீஸ் சூப்பிரண்டு நீலப் ரோகன் கூறினார். அவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது பற்றி நடந்த விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய நிஹாங் சீக்கியரான ஜஸ்பால் சிங், “இறைவனான வாஹேகுருவின் தெய்வீகக் கட்டளையை பெற்றே இந்தத் தாக்குதலைக் நடத்தினேன்” என்று காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/why-was-sukhbir-singh-badal-attacked-arrested-person-makes-sensational-confession




