மதுரை, குப்பைகளை அகற்றுவதிலேயே முழுத்தோல்வி அடைந்துள்ள தனியார் நிர்வாகங்களிடம், இப்பொழுது பாதாள சாக்கடை திட்டத்தையும் ஒப்படைத்தால் நகரம் முழுவதும் நாறிப்போகும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழக அரசு டெண்டர் இது தொடர்பாக, மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தை அரசு-தனியார் பங்களிப்பு (PPP) என்ற பெயரில் முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ள நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குப்பை நகரமாக மாறிய மதுரை ஏற்கனவே தூய்மைப் பணியைத் தனியாருக்குக் கொடுத்ததன் மூலம், கோவில் நகரமான நமது மதுரை இன்று குப்பை நகரமாக மாறியுள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் டன் குப்பைகளை அகற்ற வேண்டிய தனியார் நிறுவனம், குப்பைக்குப் பதில் மண்ணை அள்ளிப்போட்டு பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் புகார் அளித்தும், போராட்டம் நடத்தியும் கூட, கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இதைத்தான் அரசு எதிர்பார்க்கிறதா? குப்பைகளை அகற்றுவதிலேயே முழுத்தோல்வி அடைந்துள்ள தனியார் நிர்வாகங்களிடம், இப்பொழுது பாதாள சாக்கடை திட்டத்தையும் ஒப்படைத்தால் நகரம் முழுவதும் நாறிப்போகும். இதைத்தான் தமிழக அரசு எதிர்பார்க்கிறதா? உடனடியாக இந்த முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/underground-drainage-scheme-tamil-nadu-government-moves-to-hand-over-to-private-sector-mp-su-venkatesan-condemns-move




