மும்பை, தேர்வில் காப்பியடித்து சிக்கிய ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் ஐஐடி பாம்பே கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு எனர்ஜி அண்ட் சைன்ஸ் துறையில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் ஷகில் வாகுடே. மாணவர் தற்கொலை இந்நிலையில், நேற்று முன் தினம் வகுப்பறையில் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு எழுதிய ஷகில் வாகுடே சாட் ஜிபிடி பயன்படுத்தி காப்பி அடித்துள்ளார். இதை கண்டுபிடித்த ஆசியர்கள் ஷகில் வாகுடேவை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஷகில் வாகுடே நேற்று மாலை பல்கலைக்கழக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/protests-at-iit-bombay-after-student-ends-life-following-cheating-allegations




