தூத்துக்குடி, சாத்தான்குளம் அருகே பள்ளிவாசல் பத்து பகுதியில் விவசாய நிலங்களில் மின் கம்பிகள் ஆபத்தான முறையில் தாழ்வாக சென்று கொண்டிருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். வாழை தோட்டங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அபயாம் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள பள்ளிவாசல் பத்து பகுதியில் வாழை, கடலை, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் உள்ள இரண்டு மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் வயல்வெளியில் மிகவும் தாழ்வாக சென்று வாழை இலைகளில் உரசியபடி காணப்படுகின்றன. இதனால் வாழை இலைகள், காய்களை பறிக்கவும், நிலத்தில் உழவுப் பணிகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் பெரும் அச்சத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் எந்த நேரமும் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினை குறித்து சாத்தான்குளம் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் மின்கம்பத்தின் அருகே 'ஸ்டே கம்பி' அமைத்தோ அல்லது புதிய மின்கம்பம் நட்டோ மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கலாம் என விவசாயிகள் யோசனை தெரிவித்துள்ளனர். ஸ்டே கம்பி அமைக்க சொந்த செலவில் விவசாயிகள் குழி தோண்டி வைத்த போதிலும், மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகள் வலியுறுத்தல் திடீர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, பள்ளிவாசல் பத்து பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கும் மின் கம்பிகளை உடனடியாக உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/low-lying-power-lines-pose-a-danger-in-banana-plantations-farmers-fear




