புதுடெல்லி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இன்று தொலைபேசி வாயிலாக பேசினர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள்ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்தனர். இந்தியா - அமெரிக்கா இடையேயான 'விரிவான உலகளாவிய கூட்டாண்மையை' அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக நெருங்கிய தொடர்பில் நீடிக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் விவாதித்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசித்தோம். விரிவான உலகளாவிய கூட்டாண்மையை முன்னெடுக்க நெருக்கமான ஒத்துழைப்பு தொடர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி-டிரம்ப் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தை, இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/prime-minister-modi-speaks-to-us-president-trump-over-the-phone




