சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதல்-அமைச்சர் விஜய்யும் உள்ளனர். மதியம் 1.30 மணி வரை தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், நீர் பங்கீடு, கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பாரத குழு' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட் டுள்ள மண்டல குழு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும் மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தும் வகையிலும் இம்மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப் பட்ட விவகாரத்தில் கர்நாடகாவிடம் தமிழக அரசு தரப்பில் பேசி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அருகருகே அமர்ந்துள்ளனர். மேலும், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக் ரமர்கா, கேரளம் முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அ திகாரிகள் பங்கேற்றுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-conference-of-chief-ministers-from-southern-states-is-being-held-in-chennai-today




