டர்பன், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. டெம்பா பவுமா 30 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 27 ரன்னும் எடுத்தனர். மேத்யூ பிரீட்ஸ்கி அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் அவுட்டானார். மார்கோ யான்சென் அவர் 59 பந்தில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையடுத்து, 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.அந்த அணி, 41.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிட்சேல் மார் 60 ரன்களும், ரெஷா 44 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெற்றி தொடர்பாக பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது, எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக போராடினர். இரு அணிகளின் இன்னிங்சையும் முதல் 10 ஓவர்களை வைத்து பார்க்கும்போது, நாங்கள் இரு முறையும் நெருக்கடியில் இருந்தோம். ஆனால் அந்த சூழ்நிலையை சமாளித்தோம். பேட்டிங்கில் அந்த ஆடுகளத்தில் போட்டிக்கு சவால் அளிக்கும் வகையில் நல்ல ஸ்கோரை எடுத்தோம். அதேபோல் பந்துவீச்சிலும் முதல் 10 ஓவர்களுக்கு பிறகு நெருக்கடியில் இருந்தோம். ஆனால் தொடர்ந்து போராடி, இறுதியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெற்றோம். என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/victory-against-australia-south-african-captain-moved




