செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளும் வானத்தை வர்ண ஜாலமாக்குகின்றன. தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 5 வது தமிழ்நாடு சர்வதேச பட்டத் திருவிழா ஆகஸ்ட் 14,15,16 ஆகிய தேதிகளில் மாலை 3.00 மணிமுதல் 7.00 மணிவரை நடைபெறுகிறது. இது குறித்து குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனர் பென்னடிக்ட் சேவியோ, ``தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து வருடா வருடம் இந்த விழாவை நடத்தி வருகிறோம். இந்த நிகழ்வுக்கு இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருத்து 40 குழுக்கள் வந்து உள்ளனர். தினமும் 200 பட்டங்கள் இந்த 40 குழுக்களாலும் பறக்க வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு குழு சார்பில் பொய்க்கால் குதிரை, ஜல்லிக்கட்டு காளை, இந்தியா தேசிய கொடி போன்றவற்றை பட்டங்களாக பறக்கவத்து உள்ளோம். சென்ற வருடம் தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு காளை போன்ற அமைப்பு கொண்ட பட்டத்தினை பறக்க வைத்தோம். இந்த வருடம் உலக அமைதி என்ற கருத்தியல் கொண்ட பட்டத்தினை பறக்க வைத்தோம். பட்டங்கள் இரண்டு வகைப்படும்: அவை காட்சிப் பட்டங்கள் (Show kites) மற்றும் அரபிக் பட்டங்கள் (Arabic kites) ஆகும். இந்த பட்டங்கள் நாம் காகிதத்தில் செய்யும் பட்டங்கள் போன்ற சாதாரண பட்டங்கள் அல்ல: இவை நோமேக்ஸ் (Nomex) என்னும் பாராசூட் செய்யும் துணியில் செய்யப்படுகிறது. இந்த பட்டங்கள் அனைத்தும் இங்கு வடிவமைக்கப்பட்டு வியட்நாம், ஹாங்காங் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டங்கள் ஒவ்வொன்றும் அதன் அளவைப் பொறுத்து 3 லட்சங்கள் முதல் 10 லட்சங்கள் வரை வருகிறது. இந்த காட்சிப் பட்டங்கள் (show kites) அனைத்தும் விமானி பட்டங்கள் (Pilot kites) என்ற பட்டங்களின் கயிற்றுச்சரங்களில் பொம்மை பட்டங்களை அதில் பறக்க விடுவோம். இரவில் ஒளிரக்கூடிய பட்டங்களும் உள்ளன. அது இல்லாமல் ஒளி விளக்குகள் பொருத்திய பட்டங்களும் மக்களின் காட்சிக்காக வைக்கப்படுகின்றன. இது போன்ற பட்டத்திருவிழாவை மக்கள் வெளிநாடு சென்றுதான் பார்க்கமுடியும் என்று இருந்ததை, இந்தப் பட்டத்திருவிழா மூலம் நாங்கள் மாற்றி மக்கள் தமிழகத்திலும் காணலாம் என்பதை மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திருவிழாவை அனைத்து கடலோர மாவட்டத்திலும் உள்ள கடற்கரைகளில் நிகழ்த்தும் போது நமது தமிழ்நாடு சுற்றுலாத்துறை இன்னும் உத்வேகத்துடன் வளர்ச்சி பெறும். எனவே இதனை கருத்தில் கொண்டு மற்ற கடலேர மாவட்டங்களிலும் இந்த பட்டத்திருவிழாவை நடத்த வேண்டும்” என்று கூறினார். இன்று மாலையுடன் இந்த பட்டத்திருவிழா நிறைவு பெற உள்ளது, எனவே அனைவரும் தவறாது கோணமில்லா வானத்தில் பலகோணத்தில் வர்ணஜாலமிடும் பட்டங்களை காணச்செல்வோமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/kite-festival-on-ecr-sky-lights-up-in-colour-kites-priced-3-lakh-to-10-lakh




