தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, ஆன்லைனில் புதிய மின்சார இணைப்புகள் பெறும் அனைவருக்குமே இனி நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்படாது. 4 கிலோவாட் வரை மின்சார இணைப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேவையான ஆவணம் மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் GPS இருப்பிடக் குறியீடுகளைச் சரியாக ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும். இந்த இரண்டும் சரியாக இருந்தால், மின்பகிர்மானக் கழகம், GPS தகவல்களை GIS செயலி மூலம் சரிபார்த்து, நேரில் எந்தக் கள ஆய்வுமே இல்லாமல் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுவிடும். மின் இணைப்புTvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை! ஆனால், முக்கியமாக ஆன்லைனில் பதிவேற்றப்படும் ஆவணங்கள் நகல் ஆவணங்களாக இருக்கக்கூடாது. ஒருவேளை, ஆவணங்கள் சரிபார்ப்பிலோ, GPS சரிபார்ப்பிலோ ஏதேனும் குழப்பம் இருந்தால், நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். கள ஆய்விற்குப் பிறகு, மீட்டர் பொருத்தும் போது, அப்போது அங்கே GPS பதிவு செய்யப்படும். ஆவணம், GPS சரிபார்ப்பின் போது, விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து மெசேஜ், மெயில் மூலம் தெரிவிக்கப்படும். இந்த நடைமுறை வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/tn-electricity-connections-up-to-4kw-to-get-faster-online-approval




