மேற்கு வங்காளம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள கல்டலியைச் சேர்ந்தவர் காஷ்மிரா ஷேக். பட்டுச் சேலையில் ஜரிகை நெய்யும் வேலை செய்து வருகிறார். கணவர் பை தைக்கும் தொழில் செய்து வருகிறார். பணம் மூன்று குழந்தைகளுடன் வறுமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் இவருக்கு அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. தான் வாங்கிய கியாஸ் சிலிண்டருக்கு அரசு தரும் மானியம் சேமிப்பு கணக்கில் வரவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க கடந்த 1 ஆம் தேதி வங்கிக்கு சென்று சேமிப்பு புத்தகத்தை எண்ட்ரி செய்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவரது சேமிப்பு கணக்கில் ரூ 99,99,99,997 வரவாகியிருந்தது. ரூ 100 கோடிக்கு, ரூ 3 மட்டும் குறைத்து வரவு வைக்கப்பட்டிருந்தது. கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தனக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பது தெரியாமல் பதற்றமானவர், பயத்துடன் அங்கிருந்த வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். காஷ்மீரா ஷேக் அவரைப்போலவே பதறிப்போன வங்கி அதிகாரிகள், உடனே காஷ்மிரா ஷேக்கின் கணக்கை முடக்கி, பின்பு அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த பணம் எப்படி அவர் வங்கிக் கணக்கிற்கு வந்தது? யார் அனுப்பினார்கள் என்பதை வங்கி அதிகாரிகளுடன் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் அன்றாட ஜீவனத்திற்கு உதவும் அவர் செய்து வந்த நெசவுத் தொழிலுக்கான ஜரிகை வாங்க அவர் சேமிப்புக் கணக்கில் உள்ள சிறிய தொகையை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/money/rs100-cores-deposited-poor-women-account




