டெல்லி, உலகில் பல்வேறு சிங்க இனங்கள் உள்ளன. இதில் ஆசிய சிங்க இனம் இந்தியாவின் குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. இந்த ஆசிய சிங்கம், பாரசீக சிங்கம் அல்லது இந்திய சிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட, அரிய வகை சிங்க இனமான ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 891 ஆசிய சிங்கங்கள் இந்நிலையில், சர்வதேச சிங்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சர்வதேச சிங்க தினத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில், நமது இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், ஆசிய சிங்கத்தின் கர்ஜனை வரும் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஒலிக்கவும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவோம். ஆசிய சிங்கத்தின் நீண்டகால பாதுகாப்பை உறுதிசெய்ய, பிரதமர் மோடி 2020 ஆகஸ்ட் 15 அன்று ‘பிராஜெக்ட் லயன்’ திட்டத்தை அறிவித்தார். ஆசிய சிங்கங்களின் பரவல் பகுதி 2020- ல் சுமார் 30,000 சதுர கி.மீ. ஆக இருந்தது. இப்போது ஆசிய சிங்கங்களின் பரவல் பகுதி கிட்டத்தட்ட 35,000 சதுர கி.மீ. ஆக விரிவடைந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, 2015ம் ஆண்டு இந்தியாவில் இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆகும். ஆனால்,அந்த எண்ணிக்கை 2025ம் ஆண்டு 891 ஆக அதிகரித்துள்ளது. ஆசிய சிங்கங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/asian-lion-population-in-india-rises-to-891




