மெரினா; சென்னையின் அடையாளமாக இருக்கும் இந்த கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். சுடச்சுட சுண்டல், பஜ்ஜி மற்றும் மீன் வறுவல் போன்ற உள்ளூர் பலகாரங்களைச் சுவைக்கலாம். அரசு அருங்காட்சியகம்; எழும்பூரில் உள்ள இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பழமையான அருங்காட்சியகம் ஆகும். இங்கு சோழர்கால வெண்கலச் சிற்பங்கள் மற்றும் பல வரலாற்றுப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. கிண்டி தேசியப் பூங்கா; சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிண்டி தேசியப் பூங்கா, இந்தியாவின் மிகச்சிறிய தேசியப் பூங்காக்களில் ஒன்றாகும். புள்ளிமான்கள், கருப்பு மான்கள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் இங்கு அதிகம் உள்ளன. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா; வண்டலூரில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்று. சிங்கம், யானைகள், புலி, சிறுத்தை மற்றும் பல வகையான விலங்கினங்களைக் காணலாம். எலியட் கடற்கரை; சென்னையின் பெசன்ட் நகரில் உள்ள ஒரு அழகிய கடற்கரை ஆகும். மெரினா கடற்கரைக்கு தெற்கில் அமைந்துள்ள இது, மெரினாவை விட அமைதியாகவும் தூய்மையாகவும் இருப்பதால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது வள்ளுவர் கோட்டம்; திருவள்ளுவரின் நினைவாக அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னமாகும். திருக்குறளின் 1330 குறள்களும் இங்குள்ள கல்வெட்டுகளில் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மகாபலிபுரம்; சென்னையில் இருந்து சுமார் 53 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது மகாபலிபுரம். கடற்கரை நகரமான இங்கு பழமையான கற்கோயில்கள் இருக்கின்றன. கடற்கரை, கலங்கரை விளக்கம், சிற்பங்கள் நிறைந்த கோவிலை இங்கே பார்க்கலாம். மேலும் நடைப்பயிற்சி, ஓய்வு மற்றும் குழந்தைகள் விளையாட ஏராளமான பூங்காக்கள் உள்ள. செம்மொழி பூங்கா, கலைஞர் நூற்றாண்டு பூங்கா, மாதவரம் தாவரவியல் பூங்கா, பனகல் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா போன்ற சிறந்த பூங்காக்கள் உள்ளன. வாத்துகள் ஏன் தண்ணீரில் நனைவதில்லை? இதுதான் அறிவியல் காரணம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/dont-miss-these-places-when-you-visit-chennai




