கொல்கத்தா, மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் கட்சி அலுவலகம் அம்தலா சட்டசபை தொகுதியில் அமைந்துள்ளது. அந்த அலுவலகம் உரிய கட்டுமான திட்ட அனுமதி பெறாம லும், விதிமுறைகளை மீறியும் கட் டப்பட்டதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக 2 தடவை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால் எந்த பதிலும் வராததால், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்ட நிர்வாகம், அபிஷேக் பானர்ஜியின் கட்சி அலுவலகத்தை இடிக்கத் தொடங்கியது. போலீசார், மத்திய படையினர் பாதுகாப்புடன் 3 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடித்து தள்ளினர். அந்த பகுதியில் திரண்ட பா. ஜனதா தொண்டர்கள், இக்காட்சியை கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக அக்கட்டிடத்தில் இருந்து ஏராளமான கணினிகள், லேப் டாப்புகள், கோப்புகள் உள்ளிட்டவை பத்திரமாக அகற்றப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/mamatas-son-in-laws-party-office-demolished




