தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி (வயது 61). இவர்கள் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்டின் கதவை காற்றுக்காக திறந்து வைத்துவிட்டு அனைவரும் வராண்டாவில் படுத்துத் தூங்கினர். நகை திருட்டு நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் நகையைத் திருடிச் சென்றுள்ளார். நகை திருட்டு போனது குறித்து கல்யாணிக்கு ஆகஸ்ட் 26-ம் தேதியே தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜூடி வழக்குப்பதிவு செய்து, வீட்டிற்குள் புகுந்து திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-house-burglary-jewellery-worth-rs-4-lakh-stolen-police-nab-mysterious-person




