திருவள்ளூர், திருத்தணி முருகன் கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்தார். முருகப்பெருமானுக்கு 6 அடி உயரம் கொண்ட வெள்ளி வேல் காணிக்கை வழங்கி, தொடர்ந்து தங்க தேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். வேல் காணிக்கை பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- தேர்தலில் வெற்றி பெற்றால் திருத்தணி கோவிலில் வேல் காணிக்கை செலுத்துவதாக வேண்டி இருந்தேன். அதனை நிறைவேற்ற வந்துள்ளேன். தமிழக அரசு கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, குடி தண்ணீர், உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும். பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கில் யார் தவறு செய்தாலும் தண்டனை பெறுவார்கள். முருகனிடம் இருந்து தப்ப முடியாது. தமிழக அரசின் வன்மம் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இது அரசின் வன்மத்தை காட்டுகிறது. வருகின்ற பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நீட் தேர்வு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் மின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ரியல் ஹீரோ விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளை காக்க விஜய் சினிமாவில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபித்தால் தான் ரியல் ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள். இல்லையென்றால் வெறும் கண்துடைப்பாய் போய்விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திருத்தணி முருகப்பெருமானுக்கு பக்தியுடன் 6 அடி உயர வெள்ளி வேலை காணிக்கையாக சமர்ப்பித்தேன். முருகப்பெருமானை தரிசித்து, தமிழ்நாடு மக்களின் நலன், வளம், அமைதிக்காக மனமாரப் பிரார்த்தித்தேன். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணையாக இருக்கட்டும். வெற்றி வேல்! வீர… — Premallatha Vijayakant (@PremallathaDmdk) July 22, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/only-if-he-does-this-will-people-view-vijay-as-a-hero-what-did-premalatha-say




