சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. சில எளிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆன்லைன் வங்கி மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள். 123456, password, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய கடவுச்சொற்களை தவிர்க்கவும். பெரிய, சிறிய ஆங்கில எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் கலந்த வலுவான Password-ஐ உருவாக்கி, அதை யாருடனும் பகிர வேண்டாம். OTP, PIN மற்றும் வங்கி விவரங்களை யாரிடமும் தெரிவிக்காதீர்கள். வங்கி அதிகாரிகள் கூட தொலைபேசி, SMS அல்லது மின்னஞ்சல் மூலம் OTP, CVV, ATM PIN அல்லது Net Banking Password-ஐ கேட்க மாட்டார்கள். இதுபோன்ற தகவல்களை பகிர்வது பண இழப்புக்கு வழிவகுக்கும். வங்கியின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். வங்கிகள் மின்னஞ்சல், SMS மற்றும் அதிகாரப்பூர்வ செயலிகள் மூலம் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்குகின்றன. அவற்றை கவனமாக படித்து பின்பற்றுவது மோசடிகளை தவிர்க்க உதவும். வங்கி பரிவர்த்தனைகளை தொடர்ந்து கண்காணியுங்கள். உங்கள் கணக்கில் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வரும் SMS மற்றும் மின்னஞ்சல்களை சரிபார்க்கவும். அனுமதியற்ற பரிவர்த்தனை ஏதேனும் இருந்தால் உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். பொது Wi-Fi-யில் ஆன்லைன் வங்கிச் சேவைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஹோட்டல், உணவகம் அல்லது இலவச Wi-Fi வசதி உள்ள இடங்களில் Net Banking அல்லது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது. அவசரமாக பயன்படுத்தினால் பின்னர் கடவுச்சொல்லை மாற்றுவது நல்லது. ATM கார்டு மற்றும் செக் புத்தகத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள். பாதுகாப்பற்ற ATM-களில் கார்டைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். POS இயந்திரங்களில் கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும். சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். சந்தேகமான இணைப்புகளை (Links) கிளிக் செய்ய வேண்டாம். பரிசு, KYC புதுப்பிப்பு அல்லது கணக்கு முடக்கம் போன்ற காரணங்களைக் கூறி வரும் போலி SMS, மின்னஞ்சல் அல்லது WhatsApp இணைப்புகளை திறக்க வேண்டாம். வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலமாக மட்டுமே சேவைகளை பயன்படுத்துங்கள். மோசடி ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள். உங்கள் கணக்கில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை நடந்தால், உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு கார்டை முடக்கவும். மேலும், தேசிய சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளலாம் அல்லது cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம். கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/protect-your-money-in-bank-with-these-key-tips




