புதுடெல்லி, துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் நடந்தது. இதன் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தெற்கு- வடக்கு மண்டல அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 195 ரன்னும், தெற்கு மண்டலம் 312 ரன் னும் எடுத்தன. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வடக்கு மண்டலம் 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வடக்கு மண்டல அணி 297 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தெற்கு மண்டலம் தரப்பில் நிதேஷ் 5 விக்கெட்டும், கவுரி சாய்தேஜா, ஸ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தெற்கு மண்டல அணி 43.1 ஓவர் களில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரு கிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தெற்கு மண்டலம், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியுடன் மோதுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/duleep-trophy-cricket-south-zone-team-advances-to-the-final




