நீலகிரி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று வார விடுமுறையையொட்டி உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மோட்டார் படகுகள், இருவர் மற்றும் நான்கு பேர் செல்லும் மிதி படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். அப்போது பெய்த சாரல் மழையில், குடைகளை பிடித்தும் பாதுகாப்பு உடைகளைத் தலையில் போர்த்தியும் நனைந்தபடி குளுகுளு காலநிலையை ரசித்தனர். இதற்கிடையே, படகு இல்லத்தில் அதிக அளவில் காணப்படும் ஆகாயத்தாமரைகளால் மிதி படகு சவாரியில் சிரமம் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ooty-for-the-weekend-2




