மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். த.வெ.க-வும் அ.தி.மு.க தேர்தலுக்கு ஆயத்தமாகிவரும் நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் தி.மு.க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. 'இடைத்தேர்தலில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்னவென களமிறங்கி விசாரித்தோம். இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள். இரண்டு தொகுதிகள் வென்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மீதம் இருக்கும் தொகுதிகளில் வழக்கு இருப்பதால், தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நம்மிடம் பேசிய வியூக வகுப்பாளர்கள் சிலர், "மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க-தான் வென்றது. அந்த எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் த.வெ.க-வினர் என அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். தொகுதிகளை வெல்லும் முனைப்புடன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எனவே ரேஸிலிருந்து அ.தி.மு.க பின்வாங்க வாய்ப்பில்லை. விஜயபாஸ்கர் ஸ்கொயர் மறுபக்கம் த.வெ.க-வுக்கான மாஸ் இன்னும் பொதுமக்கள் மத்தியில் குறையவில்லை. இச்சூழலில் அ.தி.மு.க - தி.மு.க - த.வெ.க என மூவரும் களமிறங்கினால் வாக்குகள் பிரித்து ஆளும்தரப்புக்கு சாதகமாகப் போக அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே ஆளும்கட்சியை தோற்கடிக்கும் முனைப்புடன் அ.தி.மு.க-வுக்கு வழிவிட்டு தி.மு.க இந்த தேர்தலை புறக்கணிப்பதுதான் த.வெ.க-வுக்கு எதிரான வியூகமாக இருக்க முடியும். இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க-வை தோற்கடித்தால் விஜய்மீதான பிம்பத்தை உடைக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது" என்றனர். நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், "அ.தி.மு.க - தி.மு.க-வும் இணைந்து ஆட்சியமைக்கவே ஆலோசித்தோம். எனவே இடைத்தேர்தலில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது பற்றி ஆலோசனை நடக்கலாம். மும்முனைக் களமாக இடைத் தேர்தல் அமைந்தால் அது ஆளும்தரப்புக்கே சாதகம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. தற்சமயம் எங்களிடம் கூட்டணியும் இல்லை. ஆகையால் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா. வேண்டாமா. என்ற ஆலோசனைகள் நடக்கிறது. ஒருவேளை போட்டியிட்டால் வி.சி.க-விலிருந்து சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த பனையூர் பாபுதான் வேட்பாளராக களமிறக்கப்படுவார்" என்றனர் எடப்பாடி பழனிசாமி, விஜய், ஸ்டாலின் அரசியல் நோக்கர்கள் சிலரோ, "இந்த இரண்டு தொகுதிகளை த.வெ.க வென்றுவிட்டால் தி.மு.க, அ.தி.மு.க என இருவருக்குமே பின்னடைவுதான். எனவே யாரேனும் ஒருவர் போட்டியிடுவதுதான் த.வெ.க-வை தோற்கடிக்கும் யுக்தியாக இருக்க முடியும். ஆனால், தேர்தலை புறக்கணிப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு விருப்பமில்லை எனத் தெரிகிறது. தேர்தல் களத்தில் திமுக இல்லாமல் போனால், களத்தில் திமுக எனும் பேச்சே குறைந்து, இல்லாமல் போயிவிடும். இது பின்னடைவாகி விடும் என்ற கணக்கும் இருக்கிறது" என்றனர். இடைத்தேர்தல். வாழ்வா. சாவா. - ‘திக் திக்’ கழகங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/governance/will-dmk-boycott-by-election-2026




