புதுடெல்லி, நீக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாற்றாக புதிய அதிகாரிகள் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேசியத் தேர்வு முகமையின் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் தேர்வுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, உயர்கல்வித்துறை செயலர், என்டிஏ தலைமை இயக்குனர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய தேர்வு முகமையில் தலைமை கட்டமைப்பில் எடுக்கப்பட்டு உள்ள மாற்றங்கள் மற்றும் முக்கியத் துறைகளில் சிறப்பு நிபுணர்களை பணியமர்த்துதல் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அதில், தேர்வு முகமையில் இருந்து இதுவரை 50 ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். தலைமை தொழில்நுட்ப அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, தேர்வுபாதுகாப்பு உள்ளிட்ட 10 புதிய தலைமை பதவிகளுக்கு நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்க விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தனியார் துறையை சேர்ந்த சைபர் பாதுகாப்பு, வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் உளவியல் நிபுணர்கள் மற்றும் சில துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இந்தக் கூட்டத்தில், தேர்வு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மத்திய மந்திரி உத்தரவிட்டு உள்ளார். மேலும், அனைத்து தேர்வு நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய என்டிஏவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/nta-undertakes-exam-system-overhaul-removes-50-staff-members-advertise-10-leadership-positions




