டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த சுதந் திர தின விழா கொண்டாட்டத்தின்போது வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக சோனியா காந்தி மீது போலீசில் பா.ஜனதாவினர் புகார் அளித்துள்ளனர். வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் நேற்று முன்தினம் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தினவிழா கொண்டாடப் பட்டது.அப்போது அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி 'வந்தே மாதரம்' பாடலை பாதியிலேயே நிறுத்துமாறு கூறியதாக சொல் லப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாடு முழுவதும் சோனியா காந்திக்கு எதிராக பா.ஜனதாவினர் உள்பட பல் வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் கள். இதற்கிடையே நேற்று கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட் டம் உருவா போலீஸ் நிலையத்தில் மாவட்ட பா.ஜனதா தலைவர்களான விகாஸ் மற்றும் ராஜ்கோபால் ஆகிய 2 பேரும் புகார் செய்தனர். சோனியா காந்தி அவமதித்து விட்டார் அந்த புகாரில், 'டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடந்தபோது வந்தே மாதரம் பாடல் இசைக்கப் பட்டது. அதை பாதியில் நிறுத்துமாறு கூறி சோனியா காந்தி நாட்டின் கவு ரவத்தை பாழ்படுத்தி விட்டார்.வந்தே மாதரம் பாடலை அவமதித்து விட்டார். கடந்த மாதம் (ஜூலை) 30-ந் தேதி நாடாளுமன்றத்தில், தேசிய கீதம் மற்றும் தேசிய பாடலை அவம திப்போர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டுவரப்பட்டு அமல்படுத் தப்பட்டது. அந்த சட்டப்படி சோனியா காந்தியை தண்டிக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் உருவா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/police-complaint-filed-against-sonia-gandhi-for-disrespecting-the-vande-mataram-song




