உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தாகூர் பப்ளிக் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர சுகைனா ரிஸ்வி என்ற முஸ்லிம் மாணவி விண்ணப்பித்திருந்தார். பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜே.ஜே. முனீர், இந்திரஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உத்தரவில் கூறியதாவது: பள்ளிகளில் சீருடை விதிகள் மாணவர்களின் ஒழுக்கத்தையும், பள்ளியின் தனித்துவமான அடையாளத்தையும் பேணுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சீருடை தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் பள்ளி நிர்வாகத்துக்கே உள்ளது.தனிப்பட்ட விருப்பம் அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் பள்ளியின் சீருடை விதிகளில் இருந்து தனிப்பட்ட விலக்கு கோர முடியாது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/allahabad-high-court-dismisses-muslim-students-plea-seeking-permission-to-wear-hijab




