சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகம் கண்டு வருகிறது. அதிகரிக்கும் தங்கம் விலை கடந்த 14-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 600-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது. இது நேற்று ரூ.250 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், ரூ.2 ஆயிரம் அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையும் எழுச்சி தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் எழுச்சி கண்டது. நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று ரூ.10 அதிகரித்து கிராம் ரூ.270 ஆகவும், ரூ.10 ஆயிரம் உயர்ந்து கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் ஆகவும் இருந்தது. தங்க்ம் விலை இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லாமல், நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-up-by-rs-800-per-sovereign-what-is-the-situation-today




