சென்னை, பணம், புகழை தாண்டி பிரபலங்களுக்கு கிடைக்கும் ரசிகர்களின் அன்பு என்பது விலையில்லா பொக்கிஷம். அதை அனுபவித்து வரும் நானும் எப்போதுமே அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன் என நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். பான் இந்தியா நடிகை தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ், தனது இயல்பான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது திரைப்பயணம், தேசிய விருது பெற்ற நடிகையாகவும், தற்போது பான் இந்தியா நட்சத்திரமாகவும் உயர்ந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சர்கார், அண்ணாத்த, மாமன்னன், சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தீவிரம் 2024 டிசம்பர் 12-ஆம் தேதி தனது நீண்டநாள் நண்பரும் தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் விரைவில் 'டோரதி' என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதுதவிர நானியுடன் குத்தாட்டம் போட்டிருக்கும் 'தி பாரடைஸ்' படமும் ரிலீசாகவுள்ளது. ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், “என் வாழ்க்கையில் ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சினிமாவில் வெற்றிகள், தோல்விகள் வந்தபோதும் தொடர்ந்து ரசிகர்கள் என்னை ஆதரித்து வந்துள்ளனர். பணம், புகழை தாண்டி பிரபலங்களுக்கு கிடைக்கும் ரசிகர்களின் அன்பு என்பது விலையில்லா பொக்கிஷம். அதை அனுபவித்து வரும் நானும் எப்போதுமே அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். இந்த சினிமாவில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன்”, என்று பேசியது கவனம் ஈர்த்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-owe-a-debt-of-gratitude-to-the-fans-actress-keerthy-suresh




