ஆம்ஸ்ட்ரடாம், மகளிர் ஆக்கி உலகக்கோப்பை தொடர் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா உள்பட பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், மகளிர் ஆக்கி உலகக்கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. முன்னதாக, புள்ளிப்பட்டியலில் தலா 2 புள்ளிகளுடன் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. ஆனால், கோல் கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. இதனால், அரையிறுதி சுற்றுக்குள் நுழைய இந்த போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சியை இரு அணிகளும் தடுத்து நிறுத்தின. இறுதியில் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது. இதனால், மகளரி ஆக்கி உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய இந்தியா போட்டி டிரா ஆனதால் புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/hockey/womens-hockey-world-cup-india-miss-semi-final-spot




