இடதுசாரி இயக்கங்களோடு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று சமீபத்தில் கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், அதில் ‘சித்தாந்த சாய்மானம்’ உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டுகிறது. இதனால், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கண்டனப் போராட்டம்"மறைக்கத் தேவையில்லை; நம் தோல்விக்கு நிர்வாகிகளும் காரணம்; அதனால் தான்." - ஸ்டாலின் ஓப்பன் டாக் சென்னையில் நடந்த போராட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது. “மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்களைப் பார்த்து, அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லி, ஒரு தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு சுற்றறிக்கை அனுப்புகிறது. இது எப்படி அவ்வளவு சுலபமாகவும் எதார்த்தப் பூர்வமானது தெரியாமல் நடந்துவிட்டது என்று எப்படி நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்? அவ்வளவு விவரம் இல்லாத ஆளை எதற்குத் தலைமைச் செயலாளராக வைத்திருக்கின்றீர்கள்? அவ்வளவு விவரம் இல்லாத ஆளை, தப்புத்தவறாக அறிக்கை வெளியிடுகின்ற ஒரு ஆளை எதற்குத் தலைமைச் செயலாளராக வைத்திருக்கின்றீர்கள்? நீக்குங்கள்! தலைமைச் செயலாளர் பொறுப்பை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான தகுதி வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளே தமிழ்நாட்டில் இல்லையா? இவர் எங்கிருந்து வந்தார்? ஒருவேளை இங்கு இருக்கின்ற யாருக்குமே திறமையில்லை என்று நீங்கள் கருதினால, வெளியிலிருந்து கூடக் கொண்டு வாருங்கள். சாய்க்குமார் ஐஏஎஸ் அவர்கள் இங்கு நியமனம் செய்யப்பட்டவர் அல்ல; தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டவர். நியமனம் செய்யப்பட்டவருக்கு மேலும் நீங்கள் பதவி நீட்டிப்பு வழங்குகிறீர்கள். விஜய்`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' - ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து எப்படி உயர்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினார், அவருக்கு விளக்கம் கேட்டு நீங்கள் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறீர்கள், இதற்கு மூல காரணமாக இருந்தவர் சாய்க்குமார் ஐஏஎஸ் தலைமைச் செயலாளர் அவர்கள். அவர் மீதும் நீங்கள் முறைப்படி நடவடிக்கை எடுங்கள். என்னிடம் பேசக்கூடிய அமைச்சர்கள், ‘எங்களுடைய கவனத்திற்கு வராமல் இது நடந்துவிட்டது’ என்றுதான் அவர்கள் சொல்லுகிறார்கள். நான் அதனால்தான் பேட்டியில் கூடச் சொன்னேன். அப்படியென்றால், அதிகாரிகள் தன்னிச்சையாகத் செயல்படுகிறார்களா? தமிழ்நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசாங்கம் இருக்கிறதா? இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். ‘என்னுடைய கட்டுப்பாட்டில்தான் தமிழ்நாடு இருக்கிறது, என்னுடைய கட்டுப்பாட்டில்தான் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், ஆகவே நாங்கள் இது போன்ற தவறு என்பது நடந்துவிட்டது, இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்’ என்று தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியவர் தமிழ்நாடு முதலமைச்சரைத் தவிர வேறு யாரும் கிடையாது. இடதுசாரிகளுடைய ஆதரவோடுதான் இந்த அரசு நீடிக்கிறது என்று தெரிந்ததற்குப் பிறகும், இடதுசாரிகள் மீது இத்தகைய நோக்கப்பூர்வ உள்நோக்கத்தோடு இத்தகைய அறிக்கைகள் எல்லாம் அனுப்பப்படுகிறது. சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது என்று சொன்னால், அவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சியை நடத்தப் போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா? இதுதான் அடிப்படையான கேள்வி". முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/cpm-demands-removal-of-tamil-nadu-chief-secretary-saikumar



