'திமுக வெளிநடப்பு.' பரந்தூர் விமானம் நிலையம் குறித்து கே.என்.நேரு பேச முயன்றார். முதல்வர் '110' விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டதால் விவாதிக்க முடியாது என சபாநாயகர் மறுப்பு. பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதி கேட்டு திமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல்.'பேச விடு.பேச விடு.அவையில் பேச விடு.' என கோஷம் எழுப்பியப்படியே திமுக வெளிநடப்பு. வெற்றிப் பயணத் திட்டம் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் நகர, மாநகர பேருந்துகளில் 40 கி.மீக்கு மிகாமல் மட்டுமே பயணம் கொடுக்கப்படுகிறது. அதை விரிவுப்படுத்தப் போகிறோம். அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த வெற்றிப்பயணத் திட்டம் தொடங்கப்படும். சாதாரண பேருந்துகள் மட்டுமில்லாமல் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் புறநகர் பேருந்துகள், மலைப்பகுதியில் செல்லும் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இந்தத் திட்டத்தில் பயனடைய எந்தத் வருமான உச்சவரம்பு தகுதியும் கிடையாது. வெற்றிப்பயணத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். - விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. சட்டப்பேரவையில் விஜய் பேச்சு மீனம்பாக்கம் விமானம் நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாள்கிறது. தொழில் வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் இன்னொரு விமானம் நிலையம் தேவை. விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இன்னொரு விமானநிலையத்துக்கான இடம் எடுக்கப்பட வேண்டும். ஆனால், முந்தைய அரசு பரந்தூர் - ஏகனாபுரத்தில் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கட்ட திட்டமிட்டது. நான் பரந்தூருக்கு நேரில் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டேன். விவசாயிகளுடன் என்றும் நிற்பேன். இரண்டாவது விமான நிலையம் தேவை. அதற்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத மாற்று இடம் தேர்வு செய்யப்படும். பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் விதி எண் 110 அறிவிப்பு "அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். சிலிண்டருக்கான தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பொங்கல் பண்டிகை அன்று திட்டம் தொடக்கம். ஆண்டுக்கு தோராயமாக 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்". முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தெரிந்துக்கொள்ளுங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/live-updates-of-tamilnadu-assembly-2026-24th-august




