சென்னை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், 2 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- இன்றும் (31.07.2026) நாளையும் (01.08.2026) மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலான தென்மேற்குப் பருவமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக: - கேரளா - கர்நாடகா (குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள்) - தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள் (வால்பாறை, நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்டவை). இந்த மழை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீர் பற்றாக்குறையை சரிசெய்ய உதவுமா? இந்த மழை மிகவும் அவசியமானது. இது அணைகளுக்கு வரும் நீர்வரத்தை அதிகரிக்க உதவும் என்றாலும், ஒட்டுமொத்த நீர் பற்றாக்குறையை இது முழுமையாக சரிசெய்ய வாய்ப்பில்லை. ஏனெனில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழைப் பற்றாக்குறை இன்னும் கணிசமாகவே உள்ளது. மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஆகஸ்ட் மாதத்தின் எஞ்சிய நாட்களில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழைக்குரிய பல நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும். மேலும் மோசமாக்கும் பொதுவாக, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஆகஸ்ட் மாதம் அதிக மழை பொழியும் மாதங்களில் ஒன்றாகும், மேலும் இது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகளுக்குக் கணிசமான நீர்வரத்தை அளிக்கிறது. ஜூன் மாதத்தில் பருவமழை பெருமளவில் ஏமாற்றம் அளித்த நிலையில், தென்மேற்குப் பருவமழைக்கு மிக முக்கியமான மாதமான ஆகஸ்டிலும் மழை குறைவாக இருப்பது, இப்பருவமழையின் நிலையை மேலும் மோசமாக்கும் ஒரு காரணியாக அமைகிறது. சென்னை - வானிலை நிலவரம் ----------------- ஈரப்பதம் அதிகரிப்பதாலும், வெப்பச்சலனம் சார்ந்த மேகங்கள் இப்பகுதியைக் கடந்து செல்வதாலும், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் வேகமான மழைப்பொழிவுக்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/weather/changing-weather-chance-of-rain-in-chennai-this-evening




