‘மண்டாடி’ படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார். சூரியின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ படம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி, இயக்கியுள்ள இப்படம், தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ள ‘மண்டாடி’படம் நேர்மறையான விமர்சனங்களுடன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இப்படத்தைப் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், ‘மண்டாடி’ படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார். அப்போது, படக்குழுவினரிடம் பேசிய கமல்ஹாசன், “படத்தில் வசனங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது போன்ற கதைகளைத் தான் பிரபலமான நடிகர்கள் கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. சூரிக்கு அது கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி” என்று கூறினார். நாளுக்குநாள் இப்படத்திற்குப் பாராட்டுக்களும், ஆதரவும் அதிகரித்து வருவது படக்குழுவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kamal-met-and-praised-the-crew-of-mandaadi




