சென்னையில் சொத்துவரி மறுமதிப்பீடு செய்யப்பட்ட விவகாரத்தை இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேலு எழுப்பினார். அவரின் கேள்விக்கு 'இனி எந்த முடிவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்' என சரண்டர் ஆகியிருக்கிறார், சென்னை மாநகராட்சி ஆணையர். மாநகராட்சி மன்றம் திமுக கவுன்சிலர் வேலு பேசுகையில், 'சென்னையில் திடீரென சொத்துவரியை உயர்த்தலாம் என எந்த அடிப்படையில் முடிவெடுத்தீர்கள்? யாரிடம் ஆலோசித்து அந்த முடிவை எடுத்தீர்கள். மேயரிடமும் துணை மேயரிடமும் நீங்கள் ஆலோசிக்கவில்லை. மாமன்றத்தில் அந்தத் தலைப்பில் விவாதிக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரிடமாவது சொத்துவரி உயர்வு குறித்து தெரிவிக்கப்பட்டதா? இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? கவர்னரால் ஆளப்படும் அரசா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத போது அதிகாரிகள் முடிவெடுக்கலாம். பிரதிநிதிகள் இருக்கும்போது இப்போது எப்படி அதிகாரிகளே முடிவெடுத்தீர்கள்? சொத்து வரி உயர்வு யாரால் எடுக்கப்பட்ட முடிவென தெரிந்தே ஆக வேண்டும்' என்றார். சமீரன் இதற்கு பதில் அளித்த ஆணையர் சமீரன், 'அது நிர்வாகரீதியாக ஆணையரால் எடுக்கப்பட்ட முடிவுதான். சொத்து வரியை உயர்த்தவில்லை. முறையாக மறுமதிப்பீடுதான் செய்தோம். மக்களின் கோரிக்கையை ஏற்று இப்போது அதை நிறுத்தியும் வைத்திருக்கிறோம்' என்றார். 'மாமன்றத்தில் விவாதிக்காமல் எப்படி அதிகாரிகளே முடிவெடுக்க முடியும்?' என வேலு மறுபடியும் கேட்க, 'இனி எந்த விஷயமாக இருந்தாலும் மாமன்றத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/property-tax-row-dmk-councillor-questions-chennai-corporation-commissioner-concedes



