மும்பை, மராத்தி மொழி தெரியாத ஆட்டோ, டாக்சி மற்றும் செயலி மூலம் இயக்கப்படும் வாடகை கார் டிரைவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு புதிய விதிமுறையை அமல்படுத்த உள்ளது. அதன்படி, பயணிகளிடம் உரையாடும் அளவுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்காத டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் 3 மாதங்கள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம். தொடர்ந்து விதிமுறையை மீறினால் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த புதிய விதிமுறை வருகிற 18-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.மகாராஷ்டிர மோட்டார் வாகன விதிகள், 1989-ல் இதற்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்டோ, டாக்சி மற்றும் மீட்டர் பொருத்தப்பட்ட செயலி அடிப்படையிலான வாடகை கார்களை ஓட்டும் டிரைவர்கள், பணிக்கு தேவையான அளவுக்கு மராத்தி மொழி அறிவை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் தொடர்பு கொள்ள. இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை மந்திரி பிரதாப் சர்நாயக் கூறுகையில், பயணிகளுடன் முறையாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவும், பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யவும் உள்ளூர் மொழி அறிவு அவசியம். மராத்தி மொழி தெரியாத சில டிரைவர்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிமுறைகளில் காணப்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி அதில் இருந்து தப்பித்து வந்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார். 18-ந் தேதி முதல் நடவடிக்கை மராத்தி மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றாத டிரைவர்களுக்கு எதிராக வருகிற 18-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் சோதனைகள் நடத்தப்பட உள்ளன. விதிமுறையை மீறுவது உறுதி செய்யப்பட்டால், அதற்கான காரணங்களை பதிவு செய்து ஓட்டுனர் உரிமம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மும்பையில் உள்ள தார்டியோ வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மராத்தி மொழித் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் குவிந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/no-marathi-no-licence-new-rule-for-auto-taxi-cab-drivers-in-maharashtra-from-august-18




