தேனி, தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டார மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பாளர்கள் என காரணம் காட்டி அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து கண்டமனூர் கடமலைகுண்டு-மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இன்று பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனச்சரக அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வரும் நிலையில், அவர்களால் வனசரக அலுவலகத்திற்கும், வனத்துறை பணியாளர்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/megamalai-tiger-reserve-issue-villagers-protest-heavy-police-security-at-forest-range-offices




