சென்னை, சென்னை சூளைமேடு பகுதியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நடந்தது என்ன? சென்னையை அடுத்த சூளைமேடு பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபர் கேஷப் குமார் போகடி வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு போகடி தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். பின்னர் போதை தலைக்கேறிய அவர் அருகில் இருந்த பக்கத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அந்த வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு போகடி பாலியல் ரீதியாக கடும் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறிக் கூச்சலிட்டார். பொதுமக்கள் தர்ம அடி பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளைமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நேபாள வாலிபர் கேஷப் குமார் போகடியை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nepali-youth-arrested-for-sexually-harassing-a-woman-sleeping-at-home-in-chennais-choolaimedu




