புதுடெல்லி, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதன் சாதனைகள் குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “8 ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு இந்தியருக்கும் உயர்தரமான மற்றும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் தொடங்கப்பட்டது. இன்று, 60 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டை பெற்றுள்ளனர். இது உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமாக திகழ்கிறது. மருத்துவ செலவுகளில் சாதனை அளவிலான சேமிப்பை சாத்தியமாக்கியுள்ளது. இதன்மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைந்துள்ளனர். மேலும், மருத்துவ வசதி ஒவ்வொருவரின் வீட்டு வாசலுக்கும் நெருங்கி வரு கிறது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையங்கள் ஏற்கனவே 50 கோடிக்கும் அதிகமான வருகைகளை பதிவு செய்து, அடித்தட்டு அளவில் ஆரம்ப சுகாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/60-crore-people-benefit-from-the-ayushman-bharat-scheme-pm-modi-expresses-pride




