ஹராரே ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்து உள்ளது. கரிபா ஏரி ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் படகு ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. 200 கி.மீ.க்கும் கூடுதலான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ வரை அகலமும் கொண்ட இந்த ஏரியில், படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். 27 பேரை காணவில்லை என முதல்கட்ட தகவல் தெரிவித்தது. இந்த நிலையில், படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்து உள்ளது. ஜிம்பாப்வே மற்றும் அதன் எல்லையையொட்டி அமைந்த நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையே அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 90 பேர் பயணிக்கும் திறன் கொண்ட அந்த படகில், 120 பேர் வரை பயணித்து உள்ளனர் என கூறப்படுகிறது. இதனால், படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/zimbabwe-lake-boat-capsize-death-toll-rises-to-44




